Published : 06 Apr 2023 01:37 PM
Last Updated : 06 Apr 2023 01:37 PM

கர்நாடக தேர்தல் 2023 | 2-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் 

கோப்புப்படம்

புது டெல்லி: அடுத்த மாதம் (மே) நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்.6) வெளியிட்டுள்ளது. 42 பேர் அடங்கிய அந்தப் பட்டியலில் பிராந்திய கட்சியான சர்வோதயா கர்நாடகா கட்சியும் இடம்பிடித்துள்ளது.

224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான 142 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது. 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலையில், வியாழக்கிழமை 42 பேர் அடங்கிய இரண்டாவது பட்டியல் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் பிராந்திய கட்சியான சர்வோதயா கர்நாடகா கட்சியைச் சேர்ந்த தர்ஷன் புட்டண்ணையாவிற்கு மேலுகோட் தொகுதியை காங்கிரஸ் கட்சி ஒதுக்கியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தென்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x