Last Updated : 12 Sep, 2017 09:29 AM

 

Published : 12 Sep 2017 09:29 AM
Last Updated : 12 Sep 2017 09:29 AM

பள்ளியில் 7 வயது மாணவன் கொலை: சிபிஐ விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தந்தை வழக்கு; மத்திய, மாநில அரசுகள், சிபிஎஸ்இ.க்கு நோட்டீஸ்

பள்ளியில் 7 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரிக்க கோரி அவனது தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் மத்திய அரசு, ஹரியாணா மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ ஆகியவை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி கழிவறையில், கடந்த 8-ம் தேதி காலை 7 வயது மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தான். பாலியல் ரீதியாக மாணவனிடம் தவறாக நடக்க முயன்று, அது முடியாததால் கொலை செய்ததாக பள்ளி பேருந்து ஓட்டுநர் அசோக் குமாரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி மாணவனின் தந்தை பரூண் சந்திர தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் சார்பில் வழக்கறிஞர் சுஷில் தெக்ரிவால் தாக்கல் செய்த மனுவில், ‘பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பள்ளி வளாகத்துக்குள் எது நடந்தாலும் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்கும் வகையிலும் விதிமுறைகளை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று பரூண் சந்திர தாக்குர் கோரியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘இந்த வழக்கை, குறிப்பிட்ட ஒரு பள்ளியில் நடந்த விஷயமாக எடுத்துக் கொள்ள கூடாது. நாடு முழுவதும் உள்ள பள்ளி களுக்கும் பொருந்தும்’’ என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு, ஹரியாணா மாநில அரசு மற்றும் சிபிஐஎஸ் வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x