Published : 29 Mar 2023 05:14 AM
Last Updated : 29 Mar 2023 05:14 AM

முதலீட்டுக்கு ஏற்ற சூழல் காஷ்மீரில் நிலவுகிறது - மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பிரதமர் மோடியின் சரியான கொள்கைகள் நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றன.

சந்தை அல்லது லாபத்தை கருத்தில் கொண்டு நீங்கள் எங்குவேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதற்கான ஆலோசனைகளை என்னால் வழங்க இயலாது. ஆனால், ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழல் முதலீட்டுக்கு தகுதியாக உள்ளது என்பதை மட்டும் உறுதியாக கூறமுடியும்.

அங்கு நிலவும் அமைதியான சட்ட ஒழுங்கு சூழ்நிலை முதலீட்டு நடவடிக்கைகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. அதில், முதலீட்டாளர்களாகிய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடும் விமர்சனத்துக்குள்ளான ஜிஎஸ்டி இன்றுஜம்மு-காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மனிதவளத்தை நிறுவனங்கள் வேறு எங்கிருந்தும் தேட வேண்டியதில்லை. நம்நாட்டு இளைஞர்கள் நிறுவனத்தின் வெற்றிகரமான எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்பர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x