Published : 18 Sep 2017 09:44 AM
Last Updated : 18 Sep 2017 09:44 AM

மலை, பனிமலை பகுதிகளில் குப்பைகள் அகற்ற பிரச்சாரம்: நிர்மலா சீதாராமன் தகவல்

உயரமான மலைப் பகுதிகள், பனிமலை பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் ‘தூய்மையே சேவை’ என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இது காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் நேற்று பங்கேற்ற சீதாராமன் கூறியதாவது:

நம்மால் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப முடிகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் உலக நாடுகளுக்கு சேவை வழங்க முடிகிறது. அப்படி இருக்கும்போது நமது சுற்றுப்புறத்தை நம்மால் தூய்மையாக வைத்துக் கொள்ள ஏன் முடியாது.

உயரமான மலைப் பகுதிகள் மற்றும் பனிமலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஒரு பிரச்சார இயக்கம் விரைவில் தொடங்கப்படும்.

கன்டோன்மென்ட் வாரியத்தின் சார்பில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மின்சாரம், உரம் தயாரிப்பதும் நல்ல முயற்சி ஆகும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x