Published : 15 Mar 2023 10:15 AM
Last Updated : 15 Mar 2023 10:15 AM

போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றும் OBC மாணவர்களுக்கு இலவச பயிற்சி: மத்திய அரசு

புதுடெல்லி: போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில், ''நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் இலவசப் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 8,761 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 1,239 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

2022-23ம் ஆண்டு இத்திட்டம் திருத்தியமைக்கப்பட்டது அதன்படி மாணவர்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தங்களது விருப்பப்படி எந்த பயிற்சி நிலையத்திலும் மாணவர்கள் கற்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை https://socialjustice.gov.in/schemes/30 என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x