Published : 05 Mar 2023 05:14 AM
Last Updated : 05 Mar 2023 05:14 AM

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு - இந்தியாவின் கண்டுபிடிப்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகோள்

புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து பில் கேட்ஸ் உடன் ஆலோசனை நடத்தினேன். அவரது பணிவு, உலகத்தின் மீதான தெளிவான பார்வை பிரமிக்க வைக்கிறது" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் தனது இணைய பக்கத்தில் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரமாக நான் இந்தியாவில் முகாமிட்டிருக்கி றேன். பருவநிலை மாற்றம், சுகா தாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தி யாவில் நடைபெறும் புதுமையான பணிகளைப் பார்த்து பிரமித்தேன். உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் ஆற்றல் மிக்க, ஆக்கப்பூர்வமான பணி கள் உத்வேகம் அளிக்கின்றன. இந்தியாவின் அசாத்தியமான முன்னேற்றம், இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமை நடைமுறைகள் உலகுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தினேன்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் தயா ரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியது. காச நோய், கருங்காய்ச்சல், யானைக்கால், எச்ஐவி-யை இந்தியாவில் இருந்து முழுமையாக ஒழிக்க பிரதமர் மோடி அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பருவநிலை மாறுபாட்டை தடுக்க பிரதமர் மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி திட்டங்களில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.

பிஹாரின் பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு அண்மையில் சென்றேன். அங்கு வறட்சியைத் தாங்கி வளரும் புதிய வகை கோதுமை, கொண்டைக் கடலையை நடவு செய்வதை அறிந்து கொண்டேன். சிறு தானிய உணவு வகைகள் மிகவும் சத்தானது. மனிதனின் ஆயுளை அதிகரிக்கக் கூடியது என்பதையும் அறிந்து கொண்டேன். இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பதால் ஒட்டு மொத்த உலகமும் பலனடையும். இவ்வாறு பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x