Last Updated : 03 May, 2017 11:05 AM

 

Published : 03 May 2017 11:05 AM
Last Updated : 03 May 2017 11:05 AM

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் தோராய தாக்குதலை தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய தரப்புகள் இன்று (புதன்கிழமை) தோராய தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

முன்னதாக இதுகுறித்துப் பேசிய ராணுவ அதிகாரி, பூஞ்ச் பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்டதாகவும், அது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு ராணுவ அதிகாரி கூறும்போது, ''பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் எதுவும் இல்லை. இது தோராயமான தாக்குதல் (speculative fire) தான்'' என்றார்.

தோராயத் தாக்குதல் என்பது எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த தாக்குதல்?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான கிருஷ்ணா கதிக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) 250 மீட்டர் தூரம் வரை பாகிஸ்தான் சிறப்பு படையினர் ஊடுருவினர்.

அத்துடன் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நயீப் சுபேதார் பரம்ஜீத் சிங், தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகிய இரு எல்லை பாதுகாப்பு படை வீரர்களையும் சுட்டுக் கொன்று அவர்களது தலையை துண்டித்து உடல்களை சிதைத்தனர். இந்த சம்பவம் இந்திய ராணுவத்தை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதற்கான பதிலடியாகவே தோராய தாக்குதல் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x