Published : 03 May 2017 03:42 PM
Last Updated : 03 May 2017 03:42 PM

மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: முரண்பட்ட கருத்தால் 3-வது நீதிபதி விசாரிக்கப் பரிந்துரை

முதுநிலை மருத்துவ பட்டமேற் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர் பான வழக்கில் சிறப்பு அமர்வு நீதிபதிகள், தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பு கூறியுள்ளதால் இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராஜேஷ் வில்சன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நான் கோவை சோலையார் நகர் என்னும் அடர்ந்த மலைப் பகுதியில் பணிபுரிந்து வருகிறேன். மருத்துவ கவுன்சில் பட்டமேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகள்-2000 பிரிவு 9(ஏ) படி அரசு மருத்துவர்களுக்கு உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டின்படி தொலை தூர கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தால் அவர் களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். அதன்படி நான் 3 ஆண்டுகளாக மலைக்கிராமத்தில் பணிபுரிந்துள்ளதால், ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு எனக்கு 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசு 2017-18ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க் கைக்கு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டில், ‘நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 90 மதிப் பெண்ணுக்கு கணக்கிட்டும், மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங் கள், கடினமான பகுதிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணிபுரிந்த முன்அனு பவத்திற்கு அதிகபட்சமாக 10 மதிப் பெண்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படும்’ எனவும் தெரிவித் துள்ளது. இது சட்டவிரோதம். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி எனக்கு 30 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கினால், பட்டமேற்படிப்பில் எனக்கு எளிதாக இடம் கிடைக்கும்’’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, மனுதாரரான ராஜேஷ் வில்சனுக்கு ‘நீட்’ மதிப்பெண்ணோடு 30 சதவீதம் கூடுதல் மதிப்பெண் வழங்கவும், தமிழகத்தில் மருத்துவ பட்டமேற் படிப்புக்கான மாணவர் சேர்க் கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்தவும் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதனால் தமிழகத்தில் மருத் துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்துவதா? இல்லை தமிழக அரசின் விளக்கக் குறிப் பேட்டின்படி நடத்துவதா? என்பதில் சட்ட சிக்கல் எழுந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனி நீதிபதி யின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர் களான எஸ்.ப்ரீத்தீஸ்வரி, பி.திரு நாவுக்கரசு, ஆர்.கோகுல், பி.அருண் உள்ளிட்ட பலர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மே 7-ம் தேதிக்குள் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந் தாய்வை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தால், கோடை விடு முறையிலும் இந்த வழக்கு விடு முறைக்கால நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு கடந்த 2 தினங்களாக நடந்தது.

மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், கே.எம்.விஜயன், ஜி.சங்கரன், திலகவதி, பவானி சுப்பராயன், அமர்நாத் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். அதே போல் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் விஜயநாராயணன், வி.பி.ராமன் ஆகியோரும், தமிழக அரசின் சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், அரசு பிளீடர் ஜி.சுப்ரமணியன் உள் ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர்.

நேற்று பிற்பகல் நீதிபதி கே.கே.சசிதரன் தனது தீர்ப்பில், ‘‘மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப் படுகிறது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டை பின்பற்றி நடத்திக்கொள்ள தமிழக அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக இல்லை’’ என தீர்ப்பளித்தார்.

ஆனால் நீதிபதி கே.கே.சசிதரனின் தீர்ப்பிற்கு முரணாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். ‘‘இது தொடர்பாக ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படு கின்றன. மருத்துவ பட்டமேற்படிப் புக்கான மாணவர் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி வரும் மே 7-ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை திட்டமிட்டபடி நடத்த வேண்டும்’’ என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் இருவரும் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பைக் கூறியுள்ளதால் இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்றாவது நீதிபதி என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x