Last Updated : 17 Dec, 2016 09:30 AM

 

Published : 17 Dec 2016 09:30 AM
Last Updated : 17 Dec 2016 09:30 AM

குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து 7 நாட்கள்: நாடாளுமன்றம் வராத அதிமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தொடர்ந்து 7 நாட்கள் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க வில்லை. இதற்கு தங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. இக்கட்சிக்கு மக்களவையில் 37, மாநிலங் களவையில் 13 என மொத்தம் 50 உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், இதுவரை கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் அதிமுக உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி அவை நடவடிக்கை யில் பங்கேற்ற பின் தமிழகம் சென்ற அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் டெல்லி திரும்பவில்லை. உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். இதன்பிறகு கடந்த 6-ம் தேதி முதல், கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று வரை அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.

இது குறித்து ‘தி இந்து’விடம் அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் தொலைபேசியில் கூறும்போது, “எங்கள் அம்மா இறந்த துக்கம் முடியாமல் எங்களால் எந்த நடவடிக்கையிலும் கலந்துகொள்ள முடியாது. அவரது இறப்பின் 11-வது நாள் ஈமக்காரியம் இன்று (நேற்று) அனுசரிக்கப்படுகிறது. எனவே குளிர்கால கூட்டத்தொடரின் மீதியுள்ள 7 வேலைநாட்களிலும் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற பல்வேறு நாடாளு மன்ற நிலைக்குழுக்களின் கூட்டங் களிலும் நாங்கள் பங்கேற்க வில்லை” என்று தெரிவித்தனர்.

இரு அவைகளின் நடவடிக் கையில், இதுபோல் தொடர்ந்து 7 நாட்கள் எந்தவொரு கட்சி யின் உறுப்பினரும் பங்கேற்கா மல் இருந்ததில்லை எனக் கூறப் படுகிறது. பல்வேறு பிரச்சினை கள் குறித்து அதிமுக உறுப் பினர்கள் முன்கூட்டியே எழுப்பி யிருந்த கேள்விகளுக்கு இந்த 7 நாட்களில் மத்திய அமைச்சர்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அவைகளில் அதிமுக உறுப் பினர்கள் இல்லாததால் துணைக் கேள்விகள் எழுப்ப முடியாமல் போனது. அவைக்கு வராததால் அதிமுக உறுப்பினர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்பட மாட்டாது எனக் கூறப் படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அவை விடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவரும் மார்க் சிஸ்ட் கட்சி உறுப்பினருமான பி.கருணாகரன் கூறும்போது, “ஓர் உறுப்பினர் அதிகபட்சம் 59 நாட்களுக்கு அவை நடவடிக் கைகளில் பங்கேற்காமல் இருக்கலாம். ஆனால் இதற்காக எங்கள் குழுவிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். 60 நாட்களும் தொடர்ந்து வராமல் இருந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

மக்களவை வரலாற்றில் இதுபோல் ஒரேயொரு உறுப்பினர் மட்டும் பல வருடங்களுக்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே அதிமுக உறுப்பினர்கள் 7 நாட்கள் விடுப்பு எடுத்ததால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த நாட்களில் அவர்களுக்கு தினப்படி மட்டும் கிடைக்காது” என்றார்.

இந்தக் குழுவில் தமிழக உறுப்பினராக, பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றுள்ளார். கடந்த நவம்பர் 16-ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், அதிமுக உறுப்பினர்களும் பண மதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x