Last Updated : 09 Dec, 2016 11:38 AM

 

Published : 09 Dec 2016 11:38 AM
Last Updated : 09 Dec 2016 11:38 AM

நாடாளுமன்றம் தர்ணா செய்யும் இடமல்ல: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டிப்பு

நாடாளுமன்றம் தர்ணா செய்வதற்கான இடமல்ல என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

‘வலுவான ஜனநாயகத்துக் கான தேர்தல் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசியதாவது:

நாடாளுமன்ற அமைப்பில் அவை நடவடிக்கைகளைச் சீர் குலைப்பதை முற்றிலும் ஏற்க முடியாது. மக்கள் தங்கள் பிரதிநிதி களை பேசுவதற்காகவே நாடாளு மன்றத்துக்கு அனுப்புகின்றனர். தர்ணா செய்யவோ, அவையில் இடையூறு செய்யவோ அல்ல. அவ்வாறு செய்வது, பெரும் பான்மை உறுப்பினர்களைக் காயப் படுத்துவது மற்றும் அவர்களின் வாயை அடைப்பதாகவே கருதப் படும். குறைந்த எண்ணிக்கை யிலான உறுப்பினர்களே அவை யின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் இடுகின்றனர். அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவையை ஒத்திவைப்பதை தவிர அவைத் தலைவருக்கு வேறு வழி யில்லாமல் போகிறது. இதை முற்றி லும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆண்டுக்கு சில வாரங்களே நாடாளுமன்ற கூட்டம் நடைபெறு கிறது. பண மதிப்பு நீக்கத் துக்கு எதிரான போராட்டத் துக்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் விருப்பத்துக்கேற்ற வேறு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். கடவுளுக்குப் பயந்து உங்கள் பணியை செய் யுங்கள். நாடாளுமன்ற பணியாற் றவே நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

உறுப்பினர்கள் தங்கள் அதி காரத்தை, குறிப்பாக மக்களவை உறுப்பினர்கள் பணம் மற்றும் நிதி விவாகரங்களில் தங்கள் அதி காரத்தை பயன்படுத்தவே தங்கள் நேரத்தை செலவிட வேண்டும். நான் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டு இதைச் சொல்ல வில்லை. அவை சுமூகமாக செயல் படச் செய்வதில் ஒவ்வொரு வருக்கும் பொறுப்பு உள்ளது.

எத்தகைய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் மனம் விட்டு பேசும் வாய்ப்பு நமக்குள்ளது. அதை விடுத்து அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கக் கூடாது. அவையில் ஒரு உறுப்பினர் மீது மற்றொரு உறுப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, இதற்கு எதிராக நீதிமன்றம் தலையிட முடியாது. இத்தகைய சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

பண மதிப்பு நீக்க விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரு கின்றன. இதனால் குளிர்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ள நிலையில் பிரணாப் இவ்வாறு கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x