Published : 31 Dec 2022 08:57 PM
Last Updated : 31 Dec 2022 08:57 PM

முன்னாள் போப் 16-ம் பெனடிக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் போப் எமெரிட்டஸ் 16-ம் பெனடிக்ட் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு போப் ஆக பதவியேற்ற 16-ம் பெனடிக் ஏறக்குறைய 8 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு 2013 பிப்ரவரி 28 ல் போப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் வயது முதிர்வால் உடல்நல பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில் போப் பதவியை துறந்தார். பிறகு அவர் வாடிகன் நகரில் மேட்டர் எக்லேசியா ஆலயத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில், போப் எமரிட்டஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சபைக்காகவும் கிறிஸ்து பிரானின் போதனைகளுக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப் எமரிட்டஸ் 16-ம் பெனடிக்ட் மறைவு வருத்தமளிக்கிறது. சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் துயரப்படும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x