Published : 14 Dec 2016 09:18 AM
Last Updated : 14 Dec 2016 09:18 AM

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அப்போலோ சர்வர் விவரங்களை வெளியிட்டால் பல்வேறு குழப்பம் ஏற்படும்: ஹேக்கர்கள் குழு தகவல்

அப்போலோ சர்வர் விவரங்களை வெளியிட்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்று ஹேக் கர்கள் குழு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, தொலைக்காட்சி நிருபர் பர்கா தத் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை லெஜியன் என்ற ஹேக்கர்கள் குழு அண் மையில் முடக்கியது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் 78 நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போலோ சர்வர் விவரங்களையும் லெஜியன் குழு வசப்படுத்தியுள்ளது.

அந்த ஹேக்கர்கள் குழு அமெரிக்காவில் இருந்து வெளி யாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு இணையதளம் வாயிலாக பேட்டி அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அப்போலோ மருத்துவமனை சர்வர் விவரங்களை வசப்படுத்தி யுள்ளோம். அதில் பாதிக்கும் மேற் பட்ட தகவல்களின் உண்மைத்தன் மையை உறுதி செய்ய முடிய வில்லை. அப்போலோ சர்வர் தகவல்களை ஆராய்ந்தபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல தகவல்கள் கிடைத் தன. அவற்றை வெளியிட்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எனவே அந்த தகவல்களை வெளியிடவில்லை.

இந்திய வங்கிகளின் சர்வர் களை எளிதில் ஊடுருவி தகவல் களை திருட முடியும். எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. இது போன்ற தகவல் திருட்டுகள் முன்னரே நடைபெற்றுள்ளன.

ராகுல் காந்தி, விஜய் மல்லையா, பர்கா தத் ஆகியோரின் ட்விட்டர் மற்றும் இமெயில் தகவல் பரி மாற்றங்களை திரட்டியுள்ளோம். எங்களது அடுத்த இலக்கு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி.

இவ்வாறு லெஜியன் ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவின் வங்கிக் கணக்கு விவரம், சொத்து விவரங் கள் மற்றும் முக்கிய பாஸ்வேர்டு களை லெஜியன் ஹேக்கர் குழு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. இதேபோல நிருபர் பர்கா தத்தின் சில இமெயில்களையும் அந்த குழு வெளியிட்டுள்ளது. அவர்கள் தொடர்பான வேறு சில முக்கிய தகவல்களையும் விரைவில் வெளி யிடுவோம் என்று லெஜியன் ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x