Last Updated : 20 Dec, 2022 05:58 AM

 

Published : 20 Dec 2022 05:58 AM
Last Updated : 20 Dec 2022 05:58 AM

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனையில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு: காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை நடப்பு குளிர்காலச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டு வர பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக யுகாதி பண்டிகையின்போது ‘ஹலால் இறைச்சியை புறக்கணிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு கடிதம்: இதுதொடர்பாக பாஜக எம்எல்சி ரவிக்குமார், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சான்றளிக்கும் உணவை தவிர வேறு எந்த அமைப்பும் சான்றளிக்கும் உணவையும் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள‌ ஹலால் உணவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொட ரிலே அறிமுகப்படுத்த முடிவெடுக் கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக எம்எல்சி ரவிக்குமார் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்த மசோதாவை பாஜக எம்எல்சிரவிக்குமார் தனிநபர் மசோதாவாக கொண்டு வர முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘சிலர் அதிகாரப்பூர்வமற்ற சான்றிதழை முன்வைத்து இறைச்சி சந்தையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் இருந்து சந்தையை முழுமையாக மீட்கும்வகையில் சட்டமசோதா கொண்டுவர முடிவெடுத்துள்ளோம். அதனைநடப்புத்தொடரில் நிறைவேற்ற இருக்கிறோம்'' என்றார்.

இதுகுறித்து கர்நாடக மாநிலகாங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “பாஜகஅரசு ஹலால் மசோதா கொண்டுவந்தால் நாங்கள் அதனை எதிர்ப்போம். வாக்காளர்களைமதரீதியாக பிளவுப்படுத்தும் நோக்கில் இந்த மசோதாவை அரசுகொண்டுவரு கிறது. அதனைபேரவையில் நிறைவேற்ற விட மாட்டோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x