Last Updated : 21 Dec, 2016 10:06 AM

 

Published : 21 Dec 2016 10:06 AM
Last Updated : 21 Dec 2016 10:06 AM

நாடார் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு சர்ச்சைக்குரிய 9-ம் வகுப்பு பாடத்தை நீக்கியது சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு நூலில் நாடார் சமுதா யம் குறித்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கி உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை, மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப் பட்ட பாடநூல்கள், நாடு முழுவதி லும் உள்ள பள்ளிகளில் போதிக்கப் படுகின்றன. இதில், 9-ம் வகுப்பின் சமூக அறிவியல் பாடநூலில் நாடார் சமூகத்தினர் தொடர்பான தோள் சீலைப் போராட்டம் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடந்த 19-ம் நூற்றாண்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்த பாடத்துடன் கூடிய நூல்கள் கடந்த 2006-07-ம் கல்வியாண்டு முதல், என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவம் வரலாற்றின் அடிப்படையில் இல்லாமல், நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர், நாடார் சமுதாயத்தின் பல்வேறு சங்கங்கள், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்புகாரை எழுப்பி வந்தனர். இத்துடன் அந்த சர்ச்சைக்குரிய பாடத்தை சிபிஎஸ்இ பாடநூலில் இருந்து நீக்கும்படியும் மத்திய அரசிடம் கோரி வந்தனர். இதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களைச் சந்தித்து மனு அளித்து வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடமும் மனு அளிக்கப்பட் டது. இதை தீவிரமாக ஆராய்ந்த பிரகாஷ் ஜவடேகர், அப்பாடத்தை நீக்க சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டிக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து இருஅமைப்புகளும் அதன்மீது ஆலோசனை நடத்தின. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அப் பாடத்தை உடனடியாக நீக்குவ தாக சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ இணைச் செயலாளர் மனோஜ்குமார் வாத்சவா நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில், “நடப்பு 2016-17 கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடநூலின் பக்கம் 168-ல் இடம் பெற்றுள்ள ‘Clothing: A Social History’ என்பது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இதன் மீதான கேள்விகள், கட்டுரைகள் எதுவும் இனி தேர்வில் கேட்கப்படக் கூடாது. இந்தத் தகவலை 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இந்த உத்தரவின் நகல் நாடு முழுவதிலும் உள்ள சிபிஎஸ்இ, நவோதயா மற்றும் கேந்திரீய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களுக்கும் சிபிஎஸ்இ பிராந்திய அலுவலகங்களுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நாடு முழுவதிலும் 15 மாநில அரசுகளும் பின்பற்றி வருகின்றன. எனவே, இந்த மாநில அரசுகள் மற்றும் அவற்றின் பள்ளி முதல்வர் களுக்கும் இந்த உத்தரவு அனுப் பப்பட உள்ளது. நாடு முழுவதிலும் சுமார் 19,000 சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் நாடார் சமுதாயம் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடத்தை 9-ம் வகுப்பு மாணவர்கள் இனி படிக்கத் தேவையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x