Published : 05 Dec 2022 05:17 AM
Last Updated : 05 Dec 2022 05:17 AM

காங்கிரஸ் கட்சியின் 85-வது ஆண்டு நிர்வாகிகள் கூட்டம்: ராய்ப்பூரில் 2023 பிப்ரவரியில் நடத்தப்படும்

கோப்புப்படம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 85-வது ஆண்டு நிர்வாகிகள் கூட்டத்தை, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதிக்கு மேல் நடத்துவது என்று காங்கிரஸ் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ராகுலின் தேசிய ஒற்றுமை யாத்திரைக்குப் பின்னர்,ஜனவரி 26-ம் தேதி முதல் 2 மாதத்துக்கு வட்டார அளவில்கைகோக்கும் பிரச்சாரத்துடன் பாத யாத்திரை நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் செயற்குழுக் கூட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில், முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், மூத்த தலைவர்கள்ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீராகுமார், அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரை ராஜஸ்தானில் தொடங்க இருந்ததால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் 85-வது ஆண்டு நிர்வாகிகள் கூட்டத்தை, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3 நாட்கள் நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ‘‘ராய்ப்பூர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.அங்கு மிகப் பெரிய பொதுக்கூட்டமும் நடத்தப்படும்’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சிவேணுகோபால் தெரிவித்தார்.

இதேபோல, கன்னியாகுமரியிலிருந்து - காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமை யாத்திரையை ஜனவரி26-ம் தேதி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தேசிய ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தளராத உறுதியுடன் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார் என்று வழிகாட்டுதல் குழுவில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கைகோத்தபடி பிரச்சாரம்

தேசிய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சியாக, ஜனவரி 26-ம்தேதிமுதல் 2 மாதத்துக்கு வட்டார அளவில் பாத யாத்திரை மேற் கொள்ளப்படும், அப்போது கைகோத்தபடிபிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பிரச்சாரத்தில், தேசிய ஒற்றுமை யாத்திரை தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதம், மோடி அரசின் தவறுகள் குறித்த பிரசுரங்கள் ஆகியவை மக்களிடம் விநியோகிக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x