Published : 05 Dec 2016 09:05 AM
Last Updated : 05 Dec 2016 09:05 AM

மும்பை தொழிலதிபர் மகேஷ் ஷா தாக்கல் செய்த ரூ.2 லட்சம் கோடி, 14 ஆயிரம் கோடி கணக்கு நிராகரிப்பு

கணக்கில் வராத வருமானம், சொத்துகளை தாமாக முன்வந்து சமர்ப்பிக்கும் (ஐடிஎஸ்) திட்டம் கடந்த செப்டம்பர் 30-ல் நிறை வடைந்தது. அப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ஷா ரூ.14,000 கோடி அளவுக்கு சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தார்.

அந்த சொத்துகளுக்கு முதல் தவணையாக ரூ.1500 கோடி வரி செலுத்த வேண்டிய நிலையில் அவர் தலைமறைவானார். நேற்று முன்தினம் அவர் திடீரென தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித் தார். அப்போது ‘வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டிய சொத்துகள், பணம் எனக்கு சொந்தமானதல்ல, சில அரசியல் வாதிகள், தொழிலதிபர்களுக்கு சொந்தமானது’ என்று தெரி வித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று காலை அவர் விடுவிக்கப்பட்டார். மகேஷ் ஷா தாக்கல் செய்த வருமான கணக்கு களை நிராகரித்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றனர்.

மும்பை குடும்பம்

இதேபோல மும்பையைச் சேர்ந்த அப்துல் ரசாக் முகமது சையது, அவரது மகன் ஆரிப், மனைவி ரூக்சனா, சகோதரி நூர்ஜஹான் ஆகியோர் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கான வருவாய், சொத்து கணக்குகளை ஐடிஎஸ் திட்டத்தில் தாக்கல் செய்த னர். ஆஜ்மீரைச் சேர்ந்த அவர்கள் கடந்த செப்டம்பரில் மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மிகப் பெரிய அளவில் வருவாய் இல்லாத அவர்கள் ரூ.2 லட்சம் கோடிக்கு சொத்து கணக்குகளைக் காட்டியது சந்தேகமாக உள்ளது.

எனவே அவர்கள் தாக்கல் செய்த வருமான கணக்குகளை வருமான வரித் துறை நிராகரித் துள்ளது. சம்பந்தப்பட்ட 4 பேரும் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x