Published : 01 Nov 2016 09:35 AM
Last Updated : 01 Nov 2016 09:35 AM

கங்கோத்ரி கோயில் நடை அடைப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி ஆலயம் குளிர் காலத்தை முன்னிட்டு வேத மந்திரங் கள் முழங்க நேற்று முறைப்படி நடை அடைக்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில் கள் அமைந்துள்ளன. கோடை முதல் குளிர் காலம் வரையிலான 6 மாதங் களுக்கு மட்டுமே இந்த கோயில் களின் நடை திறந்திருக்கும். சார்தாம் யாத்திரை என்ற பெயரில் இந்த நான்கு கோயில்களுக்கும் ஆண்டு தோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டதால் கங்கோத்ரி கோயில் நடை நேற்று வேத மந்திரங்கள் முழங்க அடைக்கப்பட்டது. தொடர்ந்து கங்கா தேவியின் சிலை இமயமலை அடிவாரத்தில் உள்ள முக்பா கிராமத்துக்குப் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. அடுத்த 6 மாதங்களுக்கு இங்கு தான் கங்கா தேவிக்கு பூஜைகள் நடைபெறும்.

சார்தாம் யாத்திரையில் இடம் பெற்றுள்ள கேதார்நாத் கோயில் நடை இன்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் அடைக்கப்படுகிறது. பின்னர் குளிர்கால பூஜைகளுக்காக கேதார்நாத் சிலை உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதே போல் யமுனோத்ரி கோயில் நடையும் இன்று அடைக்கப்பட்ட தும், யமுனா தேவியின் சிலை கர்சாலிக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.

பத்ரிநாத் கோயில் நடை மட்டும் நவம்பர், 16-ம் தேதி அடைக்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x