Last Updated : 15 Nov, 2022 08:20 AM

 

Published : 15 Nov 2022 08:20 AM
Last Updated : 15 Nov 2022 08:20 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்.தலைவர் சிவகுமாரிடம் அமலாக்கத் துறை விசாரணை

டி.கே.சிவகுமார் | கோப்புப்படம்

புதுடெல்லி / பெங்களூரு: காங்கிரஸ் ஆதரவு பத்திரிகை யான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள், ‘யங் இந்தியா' அறக்கட்டளைக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை, சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

இவ்வழக்கில் நேரில் ஆஜராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் 3 வார காலம் அவகாசம் கோரினார். இதனை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் டி.கே.சிவகுமார் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு டி.கே.சிவகுமார் கூறும்போது, “இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். யங் இந்தியா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியதில் எதையும்நான் மறைக்கவில்லை. நான் ஆண்டுதோறும் தொண்டுப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குகிறேன். இதில் எந்த தவறும் நடைபெறவில்லை. என்னைப் போலவே பலர் நன்கொடை வழங்கியுள்ளார்கள். அதையெல்லாம் சந்தேகிப்பது தேவையற்றது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x