Published : 29 Oct 2022 07:05 AM
Last Updated : 29 Oct 2022 07:05 AM

டாக்சி சேவையில் குறைபாடு - வாடிக்கையாளருக்கு ரூ.20,000 வழங்க உபேர் நிறுவனத்துக்கு உத்தரவு

மும்பை: மும்பை டாம்பிவிளியைச் சேர்ந்தவர் கவிதா சர்மா. வழக்கறிஞரான இவர் கடந்த 2018 ஜூன் 12-ம் தேதி சென்னைக்கு விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு விமானத்தில் ஏற வேண்டிய சூழ்நிலையில், வீட்டிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்ல மாலை 3.29 மணியளவில் உபேர் டாக்சியை புக் செய்துள்ளார்.

ஆனால் தாமதமாக வந்த உபேர் டாக்சி டிரைவர், கவிதாவை மாலை 5.23 மணிக்குத்தான் விமான நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். இதனால், அவர் விமானத்தை தவறவிட்டார். இதையடுத்து, முன்பதிவு செய்த பணம் விரயமானதுடன், புதிதாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மேலும், டாக்சியை புக் செய்யும்போது பயணக் கட்டணம் ரூ.563 காண்பிக்கப்பட்ட நிலையில் ரூ.703 கட்டணத்தை உபேர் நிறுவனம் வசூலித்தது. இதுதொடர்பாக தானே கூடுதல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், உபேர் டாக்சி சேவை யில் குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி, வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்காக ரூ.10,000,
வழக்கு செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.20 ஆயிரத்தை கவிதா சர்மாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x