Published : 06 Jul 2014 01:40 PM
Last Updated : 06 Jul 2014 01:40 PM

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஹைதராபாத் விமான நிலையத்தில் தவித்த 94 இளைஞர்கள்

ஸ்விட்சர்லாந்தில் வேலை வாங்கி தருவதாக 94 இளைஞர்களிடம் தலா ரூ.1.6 லட்சம் பெற்று கொண்டு அவர் களை ஹைதராபாத் விமான நிலையத் தில் தவிக்கவிட்டு ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த துர்காபவன் என்பவர் ஹைதரா பாத்தில், கே.எஸ். ராவ் குரூப்ஸ் எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங் கினார். ஸ்விட்சர்லாந்து மருந்து நிறுவனத்தில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தரு வதாகக் கூறி 94 இளைஞர்களிட மிருந்து தலா ரூ. 1.6 லட்சம் வசூல் செய்துள்ளார். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் 54 பேர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். பலர் தங்களது விவசாய நிலம், நகைகள் போன்றவற்றை அடகு வைத்தும், விற்றும் இந்த பணத்தை கட்டி உள்ளனர்.

கடந்த ஜூன் 14ம் தேதி அனைவரை யும் ஹைதராபாத் விமான நிலையத் திற்கு வரச்சொல்லி, இன்னமும் முறைப்படி ஒப்பந்தம் ஆகவில்லை என கூறி திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீண்டும் அனைவரும் விமான நிலை யம் வர வேண்டும் என கூறியதால், உறவினர்கள், நண்பர்கள் என பல ருடன் வெளிநாட்டு கனவுடன் பணம் கொடுத்த இளைஞர்கள் வந்தனர்.

ஆனால் விசா முறையாக இல்லாத தால், விமானத்துறை அதிகாரிகள் அவர்களை ஸ்விட்சர்லாந்து அனுப்ப இயலாது என தெரிவித்தனர். இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டது அந்த இளைஞர்களுக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அனைவரும் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x