Last Updated : 09 Nov, 2016 03:25 PM

 

Published : 09 Nov 2016 03:25 PM
Last Updated : 09 Nov 2016 03:25 PM

ரூ.500, 1000 நடவடிக்கை: சாதாரண மக்கள் மீது மோடியின் ‘அக்கறை’யைக் காட்டுகிறது- ராகுல் கிண்டல்

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்று செவ்வாய் இரவு பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் வைத்தார்.

அதாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் குறிக்கோள் என்றால் ரூ.2000 தாள்கள் எப்படி கருப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்கும் என்று கேள்வி எழுப்பினார் ராகுல்.

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கேலித்தொனி இழையோட “வெல் டன் மிஸ்டர் மோடி” என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, “கருப்புப் பணம் பதுக்கும் உண்மையான குற்றவாளிகள் பாதுகாப்பாக, இறுக்கமாக அமர்ந்திருக்க ஏழை எளிய விவசாயிகள், மக்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் பெரும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாமானிய மக்கள் மீது தனக்கு எவ்வளவு ‘அக்கறை’ உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை மோடி காட்டியுள்ளார்.

பிரதமருக்கு ஒரு கேள்வி: 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி கருப்புப் பண பதுக்கலை கடினமாக்கும்? ஓஹோ! இதுதான் மோடி தர்க்கமோ!” என்று விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x