Last Updated : 15 Nov, 2016 05:27 PM

 

Published : 15 Nov 2016 05:27 PM
Last Updated : 15 Nov 2016 05:27 PM

இந்திய பொருளாதாரத்துக்கு உதவி புரிந்தது கறுப்புப் பணம்: அகிலேஷ் சர்ச்சைக் கருத்து

உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் சென்ற காலக்கட்டத்தில் எல்லாம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கறுப்புப் பணமே உதவியது என பொருளாதார நிபுணர்கள் கூறியதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சர்ச்சைக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

“நான் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். அதாவது, கறுப்புப் பணம் உருவாகக்கூடாது. உலக அளவில் பொருளாதாரம் பின்னடைவு கண்ட காலக்கட்டங்களில் பெரிய அளவில் இந்தியா அதன் தாக்கத்தை உணரவில்லை, இதற்குக் காரணம் கறுப்புப் பணம் என்ற இணைப் பொருளாதாரமே என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நான் கறுப்புப் பணத்தை எதிர்க்கிறேன், அதனை நான் விரும்பவில்லை. எந்த அரசு ஏழைகளை அதிக சிரமத்திற்குள்ளாக்குகிறது மக்கள் அந்த அரசை ஆட்சியிலிருந்து விரட்டியுள்ளனர், இந்த அரசு சாமானிய மக்களுக்கு அதிகப்படியான சிரமங்களை அளித்துள்ளது.

நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றாது, ரூ.500, 1000 என்று கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் தற்போது ரூ.2000 நோட்டுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றார் அகிலேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x