Last Updated : 22 Nov, 2016 10:26 AM

 

Published : 22 Nov 2016 10:26 AM
Last Updated : 22 Nov 2016 10:26 AM

ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 4-வது நாளாக நேற்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.

மக்களவை நேற்று காலையில் கூடியதும், நேற்று முன்தினம் நிகழ்ந்த கான்பூர் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று ரூபாய் நோட்டு விவ காரத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவந்து அவை விதி 56-ன் கீழ் வாக்கெடுப் புடன் கூடிய விவாதம் நடத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் அவை விதி 193-ன் கீழ் விவாதம் (வாக் கெடுப்பு இல்லாத) நடத்த அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க் கட்சியினர் கோஷம் எழுப்பினர். கூச்சல் நிலவியபோதிலும் அவையை ஒத்திவைக்கப்போவ தில்லை என்றும் கேள்விநேரம் தொடரும் என்றும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறி வித்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இலங்கை கடற் படையினர் தமிழக மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டது தொடர் பான பிரச்சினையை அதிமுக உறுப் பினர்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். பின்னர் அடுத்தடுத்து அவை கூடியபோதும் தொடர்ந்து கூச்சல் நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்…

மாநிலங்களவை நேற்று கூடியதும், ரூபாய் நோட்டு விவ காரத்தை எதிர்க்கட்சிகள் எழுப் பின. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த திடீர் முடிவால், பணத்தை மாற்றுவதற்காக வரி சையில் காத்திருந்தபோது உயிரிழந்த 70 பேருக்கு இரங்கல் தீர் மானம் நிறைவேற்றிவிட்டு, இது தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என அவர்கள் வலி யுறுத்தினர். ஆனால் இதை ஏற்க முடியாது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தால், அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் இரு அவைகளும் முடங்கின.

முன்னதாக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜேஎம்எம் மற்றும் திமுக ஆகிய 10 கட்சிகளின் தலைவர்கள் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசித்தனர். அப்போது, ரூபாய் நோட்டு விவ காரத்தில் அரசுக்கு எதிராக போராடு வதற்கான பொது செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

10 கட்சி உறுப்பினர்களும் புதன் கிழமை நாடாளுமன்ற வளாகத் தில் உள்ள காந்தி சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடு வது என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் குடியரசுத்தலைவர் மாளி கையை நோக்கி பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x