Published : 05 Sep 2022 09:21 AM
Last Updated : 05 Sep 2022 09:21 AM

மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

விஜய் மல்லையா (கோப்புப்படம்)

புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

‘கிங் பிஷர்’ நிறுவனர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ம் ஆண்டு லண்டன் தப்பிச் சென்றார். 2017-ம் ஆண்டு லண்டன் காவல் துறை அவரை கைது செய்தது. ஆனால், விரைவிலேயே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதேசமயம் 2017-ம் ஆண்டு இந்தியாவில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டதை அடுத்து, அவர் இந்தியாவுக்கு வந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

அவர் தரப்பிலிருந்து உரிய விளக்கம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி, தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி ரவிந்திர பட் அடங்கிய அமர்வு விஜய் மல்லையாவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்து முடிவெடுத்தது. இந்நிலை யில், தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறுகையில், “மல்லையாவின் வழக்கறிஞருக்கு பல முறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டும், அவர் முறையான விவரங்களை சமர்ப்பிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x