Published : 04 Oct 2016 10:43 AM
Last Updated : 04 Oct 2016 10:43 AM

டெல்லியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைக்காதோர் பட்டியலைத் தராத ஆம் ஆத்மி அமைச்சருக்கு ரூ.25,000 அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமிசந்திரா-பாபிதா ரவுத் தம்பதியின் 7 வயது மகன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு உயிரிழந்தான். டெல்லி மருத்துவ மனைகளின் அலட்சியத்தால் அவினாஷ் இறந்ததாகக் கூறி, லட்சுமிசந்திராவும், பாபிதாவும் கடந்த செப்டம்பர் மாதம் தெற்கு டெல்லியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஏற்கெனவே டெல்லியில் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சலால் 30-க்கும் மேற்பட் டோர் பலியான நிலையில், இச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்தது. நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான பெஞ்ச் இவ்வழக்கை விசாரிக் கிறது.

முன்னதாக இவ்வழக்கு விசாரணையின்போது, டெல்லி யில் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு (பாஜக ஆளும்) உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு குற்றம்சாட்டியது.

நோய் பரவாமல் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் குறித்து, துணை நிலை ஆளுநர் அலுவலகத் துக்கு அனுப்பப்படும் கோப்பு கள் அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படாமல் இருப்பதாக வும் டெல்லி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளின் பட்டியலை அக்டோபர் 3-ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, கடந்த வெள்ளிக் கிழமை அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் பரஸ் குஹாத், ‘பட்டியலை தயார் செய்ய 24 மணிநேரம் போதவில்லை. 7-ம் தேதி வரை அவகாசம் தர வேண்டும்’ எனக் கோரினார்.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி லோகுர், ‘நோயால் மக்கள் இறந்துகொண்டிருக்கும்போது, 7-ம் தேதி வரை காத்திருக்க முடியாது. 24 மணி நேரத் தில் பட்டியலை தாக்கல் செய்ய முடியாவிட்டால், வேறு வழக் கறிஞர் அமர்த்திக்கொள்ளுமாறு உங்கள் கட்சிக்காரரிடம் சொல்லி விடலாமே’ என, காட்டமாக குறிப்பிட்டார்.

மேலும், பட்டியலை தாக்கல் செய்யத் தவறியதற்காக, டெல்லி மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயினுக்கு நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x