Published : 20 Aug 2022 11:51 PM
Last Updated : 20 Aug 2022 11:51 PM

தனது கனவு இல்லத்தை 500 அடி இடமாற்றி வைக்கும் பஞ்சாப் விவசாயி: காரணம் என்ன?

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கிராமத்தைச் சேர்ந்த விவாசயி ஒருவர், தன்னுடைய வீடு இருக்கும் இடத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்க இருப்பதால், தனது இரண்டுமாடி வீட்டை அது இருக்கின்ற இடத்தில் இருந்து 500 அடி தள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சங்ரூர் மாவட்டம் ரோஷன்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்விந்தர் சிங் சுகி. இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் தனது கனவு இல்லமான இரண்டு மாடி வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், டெல்லி - அமிர்தசரஸ் - கத்ரா விரைவு சாலை சுக்விந்தரின் வீட்டின் வழியாக வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விரைவுச்சாலை, ஹரியான- பஞ்சாப்- ஜம்மு காஷ்மீர் வரை செல்லும் பயணிகளின் பயணநேரத்தை வெகுவாக குறைக்கும்.

நெடுஞ்சாலை பணிக்காக வீட்டை இடிப்பதற்கு பஞ்சாப் அரசாங்கம் சுக்விந்தர் சிங்கிற்கு இழப்பீடு தர முன்வந்ததது. ஆனால் விவசாயி சுக்விந்தருக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. வீட்டை முழுவதுமாக இடிப்பதற்கு பதில் அதனை வேறு இடத்திற்கு மாற்றி விடலாம் என நினைத்துள்ளார். இதனை செயல்படுத்தும் விதமாக தனது வீடு இருந்த பழைய இடத்தில் இருந்து 500 அடி அதனைத் தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளார்.

உள்ளூர் கட்டிடத் தொழிலாளர்களின் உதவியுடன் சுக்விந்தரின் வீடு தற்போது 250 அடி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 500 அடி நகர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சக்கரங்கள் போல உள்ள கியர்கள் வீட்டை நகர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகள் குறித்த சுக்விந்தர் கூறும்போது," இந்த வீட்டைக் கட்டுவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகளானது. இதற்காக, ரூ.1.5 கோடி ரூபாய் செலவானது. இது எனது கனவு இல்லம். அதனால் நான் வேறு வீடு கட்ட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x