Last Updated : 22 Oct, 2016 09:21 AM

 

Published : 22 Oct 2016 09:21 AM
Last Updated : 22 Oct 2016 09:21 AM

லாலு மகனை திருமணம் செய்ய 44,000 பேர் விருப்பம்: புகார் தெரிவிக்கும் வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பிய இளம்பெண்கள்

பிஹாரில் சாலைகள் தொடர்பான புகார்களுக்கு லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி அறிவித்த வாட்ஸ் அப் எண்ணில் அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரி வித்து இளம் பெண்களிடம் இருந்து 44,000 தகவல்கள் வந்துள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி பிரசாத், பிஹார் துணை முதல்வ ராக உள்ளார். 29 வயது இளைஞ ரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிஹார் மாநில நெடுஞ்சாலைத் துறையையும் தனது பொறுப்பில் வைத்திருக்கும் தேஜஸ்வி கடந்த ஜூன் 29-ம் தேதி 9470001346 என்ற மொபைல் எண்ணை அறிமுகம் செய்தார்.

பிஹாரில் பழுதடைந்த சாலை கள் குறித்த புகாரை இந்த எண் ணுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் படங் களுடன் அனுப்பலாம் என்றும், இதன் மீது தான் நேரடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அவரது வாட்ஸ் அப் எண்ணில் அன்றாடம் தகவல்கள் குவியத் தொடங்கின. ஆனால் இவற்றில் சாலைகள் தொடர்பான புகார்களை விட தேஜஸ்வியை மணம்முடிக்க விரும்புவதாக வந்த தகவல்கள் பலமடங்கு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தேஜஸ்வியின் வாட்ஸ் அப்பை நிர்வகித்து வரும் குழு தரப்பில் கூறும்போது, “இந்த எண் வெளி யிட்ட தொடக்க நாட்களில் பழு தடைந்த சாலைகள் குறித்த புகார்கள் வந்தன. சில நாட்களுக்கு பிறகோ துணை முதல்வரை பாராட்டியதுடன் அவரை மணம் செய்ய விரும்புவதாகக் கூறி படங் களுடன் தகவல்கள் குவியத் தொடங்கிவிட்டன. கடந்த 4 மாதங் களில் வந்த 47,000 தகவல்களில் 44,000 தகவல்கள் மணம்முடிக்க விரும்பி இளம்பெண்கள் அனுப் பியவை” என்று தெரிவித்தனர்.

இந்த தகவல்கள் பிஹாரில் இருந்து மட்டுமின்றி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் பெண்கள் தங்கள் வயது, கல்வித் தகுதி, நிறம், உயரம், பெற்றோர் உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டிருந் தனர். இன்னும் பலர், தங்கள் ஜாதகத் தையும் இணைத்திருந்தனர்.

இவ்வாறு ஜாகத்துடன் தகவல் அனுப்பிய ஒரு பெண், தேஜஸ்வியை விட தான் உயர்ந்த சமூகத்தை சேர்ந்தவர் எனவும், தேஜஸ்வியின் சிறந்த அரசியல் காரணமாக அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். டெல்லியின் பிரபல லேடி ராம் மகளிர் கல்லூரியில் படித்ததாக மற்றொரு இளம்பெண் தகவல் அனுப்பியுள்ளார்.

இத்தகவல்கள் தேஜஸ்வி திருமணத்துக்கு உதவிடலாம் என்று கருதி அவற்றை அத்துறையினர் அச்சுப் பிரதி எடுத்து லாலுவுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் லாலு-ராப்ரி தேவி தம்பதியர் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கேள்விக்கு தேஜஸ்வி வெட்கத்துடன் பதில் அளிக்கும்போது, “எனது பணியை பாராட்டி வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இந்த வாட்ஸ் அப் எண் என்னிடம் இல்லை. சாலை சீரமைப்புக்காக அமர்த்தப்பட்ட எனது அதிகாரிகள் குழு அதை நிர்வகித்து வருகிறது. இதை அறியாமல் தேவையற்ற தகவல்களை சிலர் அனுப்பியிருப் பது கவலை அளிக்கிறது” என்றார்.

பிஹாரில் லாலு முதல்வ ராக இருந்தபோது ஒருமுறை, “இங்குள்ள சாலைகளை நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல் பளபளக்கச் செய்வேன்” என்று தெரிவித்தார். இது தொடர் பான சர்ச்சைகள் இன்று வரை அடங்காமல் அவ்வப்போது நகைச் சுவையுடன் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x