Published : 09 Oct 2016 01:26 PM
Last Updated : 09 Oct 2016 01:26 PM

குடும்பத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க 68 நாள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது ஜைன சிறுமி உயிரிழப்பு

ஹைதராபாத் குந்தல மார்க்கெட் பகுதியில் நகைக் கடை நடத்தி வருபவர் லட்சுமி சந்த் மனீஷ். ஜைன மதத்தைச் சேர்ந்த இவரது மகள் ஆராதனா (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

பெற்றோரின் கட்டளையை ஏற்று, ஜைன மத மரபுப்படி கடந்த 10 வாரங்களுக்கு முன்பு ஆராதனா உண்ணா விரதத்தை தொடங்கி உள்ளார். தனக்கு மிகுந்த பசியாக உள்ளது என கூறியபோதிலும், அவரது தந்தை உணவு தர மறுத்துள்ளார். 68-வது நாள் ஆராதனா உயிரிழந்தாள்.

இந்த விஷயத்தை வெளியே கூறாமல்,கடந்த 3-ம் தேதி தங்கள் மத சம்பிரதாயப்படி, ‘பாரானா’ (விரத முடிப்பு) நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி உள்ளனர். இதில் உறவினர் மட்டுமின்றி தெலங்கானா அமைச்சர் பத்மா ராவும் கலந்து கொண்டுள்ளார்.

மனீஷுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீள சென்னை சாமியார் ஒருவர் கூறியபடி மகளை கட்டாயப்படுத்தி உண்ணாவிரதம் இருக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தி னர் சிறுவர்கள் உரிமை கழகத்தி னரிடம் புகார் செய்தனர். அதன்படி இந்த சங்கத்தின் தலைவர் அனுராதா ராவ் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் தந்தை லட்சுமி சந்த் மனீஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சாமியாரும் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

ஆராதனா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x