Last Updated : 28 May, 2016 10:18 AM

 

Published : 28 May 2016 10:18 AM
Last Updated : 28 May 2016 10:18 AM

2014 நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: பாஜக தலைவர் அமித் ஷா திட்டவட்டம்

‘‘மத்தியில் உறுதியான அரசை பாஜக வழங்கி உள்ளது. கடந்த 2014 தேர்தலில் அளித்த வாக்குறுதி களை மீதமுள்ள 3 ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றுவோம்’’ என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.

மத்தியில் பாஜக அரசு பொறுப் பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளன. இதை பாஜக தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந் நிலையில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அமித்ஷா கூறியதாவது:

மத்தியில் காங்கிரஸ் தலைமை யில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுக ளாக ஊழல் மலிந்து காணப் பட்டது. கொள்கைகள் முடங்கிப் போயிருந்தன. ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மத்தியில் உறுதியான அரசை பாஜக வழங்கி உள்ளது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மீதமுள்ள 3 ஆண்டுகளில் நிறை வேற்றுவோம். நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம். வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லும் முன்பு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்போம்.

கடந்த 2 ஆண்டு பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளால் கூட ஊழல் புகார் கூற முடியவில்லை. அந்தளவுக்கு பிரதமர் மோடி தலைமையில் பாஜக சிறந்த அரசை வழங்கி வருகிறது.

மக்கள் பிரச்சினைகளில் பாஜக அரசு உடனுக்குடன் முடிவெடுத்து வருகிறது. அதற்கு மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வகை யில் பாஜக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளதை உதாரண மாக கூறலாம். நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு வரப்படும் சட்டங்களை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.

அதிமுக ஆதரவளிக்குமா?

தமிழக சட்டப்பேரவை தேர்த லில், ஆளும் அதிமுக.வை பாஜக கடுமையாக விமர்சித்து பிரச்சாரத் தில் ஈடுபட்டது. ஆனால், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஜெய லலிதா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், ‘‘சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, அதிமுக ஆதரவளிக்கும் என்று பாஜக எப்படி எதிர்பார்க்கிறது?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அமித் ஷா நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், ‘‘நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவும், முடங்கிக் கிடந்த கொள்கைகளை சீரமைத்து பொருளாதாரத்தை முன் னேற்றவும் மக்கள் எங்களுக்கு வழங்கிய பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறோம்.

நாங்கள் அளித்த வாக்குறுதி களில் மீதமுள்ளவற்றை வரும் 3 ஆண்டுகளில் நிறைவேற்றி காட்டு வோம். கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் நிறைய பணி செய் திருக்கிறோம்’’ என்றார்.

அமைச்சரவை மாற்றமா?

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சர்வானந்த சோனோவால். அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்த மாநில முதல்வராக சோனோவால் பதவியேற்றார். இதையடுத்து, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி காலியானது.

டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமித் ஷாவிடம், ‘‘மத்திய அமைச்சரவை மாற்றப்படுமா?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா கூறும்போது, ‘‘காலியாக உள்ள இடங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், அமைச்சரவை மாற்றத்துக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை’’ என்று பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x