Last Updated : 11 May, 2016 04:09 PM

 

Published : 11 May 2016 04:09 PM
Last Updated : 11 May 2016 04:09 PM

டெல்லியில் மழலையர் பராமரிப்பு மைய அலட்சியத்தால் விரலை இழந்த 3 வயது சிறுமி

டெல்லி - குர்கானில் உள்ள ‘செரூப் ஏஞ்சல்’ என்ற தனியார் மழலையர் பராமரிப்பு மையத்தின் அலட்சியத்தினால் 3 வயதுக் குழந்தை அதன் கட்டை விரலை இழந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

குழந்தையின் தாயார் ஷிவானி பி.சர்மா அந்த மழலையர் பராமரிப்பு மையத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கையை வலியுறுத்தி தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இந்தப் பதிவை சுமார் 11000 பேஸ்புக் பயனாளர்கள் பகிர்ந்துள்ளனர். இவருக்கு ஆதரவாக ஏகப்பட்ட கருத்துகள் குவிந்து வருகின்றன.

ஏப்ரல் 28-ம் தேதியன்று தனது 3 வயது மகள் மைராவை செரூப் ஏஞ்சல் டே கேர் செண்டரில் விட்டுச் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் செண்டரிலிருந்து ஆசிரியை ஒருவர் தொலைபேசியில் அழைத்து ஷிவானியிடம் ‘எமர்ஜென்சி’ என்று கூறியுள்ளார். அதாவது குழந்தையின் கட்டை விரலில் அடிபட்டுவிட்டது மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஷிவானி ஆர்டிமீஸ் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு குழந்தை மைராவின் வலது கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார்.

கதவிடுக்கில் கையை குழந்தை வைத்துக் கொண்டிருந்த போது இன்னொரு குழந்தை கதவை சாத்தியதால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டதாக டே கேர் செண்டர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கூறும்போது ‘கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதைத் தவிர வேறு வழியிலை’ என்று ஷிவானியிடம் தெரிவித்துள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த பிறகு மே 1-ம் தேதி குழந்தைகள் காப்பக உரிமையாளர் ஷிவானி வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டதோடு செலவுகளை முழுதும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார். இது தங்களுடைய தவறு என்றும் உரிமையாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அதன்பிறகு உரிமையாளர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இவர் தொலைபேசியில் அழைத்தால் கூட அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து பேஸ்புக் மூலம் இந்த விவகாரத்தில் கடைசி வரை போராடுவது என்று பாதிக்கப்பட்ட ஷிவானி முடிவெடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x