Published : 11 May 2016 10:01 AM
Last Updated : 11 May 2016 10:01 AM

கலவரத்தில் கொளுத்தப்பட்ட பேருந்துகளை மக்களின் பார்வைக்கு வைத்த கர்நாடக அரசு

கர்நாடக மாநிலத்தில் நடை பெறும் பல்வேறு போராட்டங் களின் போது அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தீயிட்டு கொளுத்தப்படுகின்றன.

சமீபத்தில் ஆயத்த ஆடை ஊழி யர்கள் மத்திய அரசின் பி.எஃப். திட்டத்தை கண்டித்து பெங்களூரு வில் போராட்டம் நடத்தினர். மூன்று நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில் 32 அரசுப் பேருந்து கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 8 அரசுப் பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் நடைபெறும் போராட்டம் மற்றும் கலவரங் க‌ளின் போது அரசுப் பேருந்துகள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா பேருந்து நிலையத் தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கர்நாடக போக்குவரத்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஆயத்த ஆடை ஊழியர்களின் போராட்டத்தின் போது எரிக்கப் பட்ட 8 அரசுப் பேருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

சிதிலமடைந்து இருந்த பேருந்துகளுக்கு மாலையிட்டு, “இது உங்கள் சொத்து, எக் காரணம் கொண்டும் சேதப்படுத்தா தீர், மக்கள் சொத்தை பாது காப்பீர்” என்பன போன்ற வாசகங் களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசும் போது, “மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பேருந்துகள் மக்களுக்காக இயக்கப்படு கின்றன. மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பேருந்தை தீயிட்டுக் கொளுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய சொந்த மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை எவ்வளவு பொறுப் புடன் பாதுகாக்கிறோமோ, அதே அளவுக்கு அரசுப் பேருந்து களையும் பாதுகாக்க வேண்டும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x