Published : 18 Jun 2022 10:53 PM
Last Updated : 18 Jun 2022 10:53 PM

அக்னி வீரர்களுக்கு ஆறு கவர்ச்சிகரமான சேவை வாய்ப்புகள்: கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம் | கோப்புப்படம்

புதுடெல்லி: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்திய கடற்படையில் பணிபுரிந்த பின்னர், வணிகக் கடற்படையின் பல்வேறு பொறுப்புகளில் அக்னி வீரர்களை சுமூகமாக மாற்றுவதற்கு ஆறு கவர்ச்சிகரமான சேவை வழிகளை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் அக்னிவீரர்களுக்கு தேவையான பயிற்சியைப் பெறவும், சிறந்த கடற்படை அனுபவம் மற்றும் தொழில்முறை சான்றிதழுடன் உலகம் முழுவதும் உள்ள ஊதியம் பெறும் வணிகக் கடற்படையில் சேர உதவும். மும்பையில் உள்ள துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைப்பான கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் இந்த விதிகளை சனிக்கிழமை அறிவித்தது.

அக்னி பாதை திட்டம், இந்தியாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு மாற்றமான நடவடிக்கை, தேசத்தின் இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அதே நேரத்தில், வளமான தொழில்முறை அனுபவத்தையும் பயிற்சியையும் பெற்று வாய்ப்புகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவுகிறது.

இத்திட்டம் குறித்து பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், “மாற்றத்திற்கான அக்னிபாதை திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, இந்திய ஆயுதப்படைகளின் சுயவிவரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியாகும். இதன் மூலம் அக்னி வீரரக்கள் புதிய தொழில்நுட்பங்களுக்குத் தகவமைத்துக் கொள்வார்கள் மற்றும் உலகளாவிய வணிகக் கடற்படையில் லாபகரமான தொழிலைப் பெறுவதற்காக, நமது உலகத்தரம் வாய்ந்த இந்தியக் கடற்படையுடன் இணைந்து அவர்களைத் தயார்படுத்துவார்கள்.

இந்தத் திட்டங்களின் மூலம், வணிகக் கடற்படையில் திறமை மிக்கவர்களின் இடைவெளியைக் குறைக்க இந்திய கடற்படையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இது எங்கள் அக்னி வீரர்கள் கப்பல் துறையில் மாற்றம் பெறவும், இந்திய கடல்சார் பொருளாதாரத்திற்கு அவர்களின் வளமான திறன்கள் மற்றும் அனுபவத்தின் மூலம் மகத்தான பங்களிப்பை வழங்குவதன் மூலம் வணிக கடற்படையில் ஒரு கவர்ச்சியான வாழ்க்கையை உருவாக்கவும் உதவும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x