Last Updated : 19 May, 2016 08:10 AM

 

Published : 19 May 2016 08:10 AM
Last Updated : 19 May 2016 08:10 AM

உத்தராகண்டில் மீண்டும் காட்டுத் தீ

உத்தராகண்டில் வாட்டியெடுக் கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் மீண்டும் தீ பற்றி எரிகிறது.

உத்தர்காசி மாவட்டத்தில் சுமார் 111 இடங்களில் பற்றியுள்ள தீ காரணமாக 180 ஹெக்டேர் வனப்பரப்பு நாசமாகி யுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தர் பாபு அத்தாங்கி கூறும்போது, “வனச்சரகர்களும், மண்டல வன அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்த காட்டுத்தீ விரைவில் கட்டுப்படுத்தப்படும். அதற்குத் தேவையான நிதி மற்றும் உபகரணங்கள் உள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கத்தை விட நான்கு அல்லது ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகி வருகிறது. இதுவும் காட்டுத் தீ ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உத்தராகண்டில் கடந்த பிப்ரவரியில் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. இதுவரை 1857 காட்டுத் தீ சம்பவங்களில் 4,048 ஹெக்டர் வனப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x