Last Updated : 03 May, 2016 10:47 AM

 

Published : 03 May 2016 10:47 AM
Last Updated : 03 May 2016 10:47 AM

உத்தராகண்ட் காட்டுத் தீ: 4 விஷமிகள் கைது

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மற்றும் அதை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில தினங் களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. சுமார் 2,269 ஹெக்டேர் நிலங்கள் இந்த தீயில் கருகி நாசமடைந்துள்ளன. 7 பேர் பலியாகி யுள்ளனர். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய தாவது:

உத்தராகண்ட் காட்டுத் தீயை அணைப்பதில் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. பவுரி கர்வால் என்ற வனப்பகுதியில் தீ வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தராகண்டின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, ‘‘காட்டுத் தீயை அணைக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட 6 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக ரூ.5 கோடி நிதியுதவி யும் மாநில அரசுக்கு அளிக்கப்பட் டுள்ளது’’ என்றார்.

புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் காட்டுத் தீ பாதித்த பகுதிக்கு ஹெலி காப்டரால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்த ஒரிரு தினங்களுக்குள் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சலில் காட்டுத் தீ

இமாச்சல் பிரதேசத்திலும் இதுவரை 378 முறை நிகழ்ந்த காட்டுத் தீயால் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு அளவிலான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் பசுமை காடுகள் அழிந்துவிட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x