Last Updated : 12 May, 2016 08:26 AM

 

Published : 12 May 2016 08:26 AM
Last Updated : 12 May 2016 08:26 AM

பயன்பாட்டில் இல்லாத 1,053 சட்டங்கள் ரத்து

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பயன் பாட்டில் இல்லாத 1,000-க்கும் மேற் பட்ட பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, சட்ட அந்தஸ்த்தை இழந்துள்ளன.

சமகால சூழலுக்கும், நடை முறைகளுக்கும் ஒவ்வாத பழமை யான சட்டங்களை நீக்கிவிட மத்திய அரசு கொள்கை அளவில் முடி வெடுத்துள்ளது. இச்சட்டங்களால் நீதித்துறையில் எந்த பயனும் இல்லாததோடு, தேவையற்ற நிதிச் செலவினங்கள் மற்றும் திறமையான அரசு நிர்வாகத்துக்கு தடையாக இருப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது.

இந்த வகையில், பயனற்றவை என, இதுவரை 1,741 சட்டங்கள் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், தேவையற்ற சட்டங்களை நீக்கு வதற்கு வகை செய்யும், நிதிச் செலவினங்கள் சட்ட மசோதா (நீக்கம்), 2016 மற்றும் சட்டத்திருத்தம் மற்றும் நீக்கத்துக்கான சட்ட மசோதா, 2016 ஆகிய இரண்டும் மக்களவையில் கடந்தாண்டு மே மாதமும், மாநிலங்களவையில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டன.

இரு அவைகளிலும் நிறைவேறியதை அடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் அண்மையில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயனற்றதாக அடையாளம் காணப்பட்ட 1,053 சட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டு, சட்டப்படியான அந்தஸ்தை இழந்துள்ளன.

அதிக எண்ணிக்கையில் சட்டங் கள் ரத்து செய்யப்படுவது, 2001ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறை. கடந்த 1950 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான காலகட்டத் தில் சுமார், 100 சட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x