Last Updated : 17 May, 2016 08:41 PM

 

Published : 17 May 2016 08:41 PM
Last Updated : 17 May 2016 08:41 PM

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள்

டெல்லி மாநகராட்சியின் 13 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இரண்டாவதாக காங்கிரஸுக்கு 4 மற்றும் பாஜகவிற்கு 3-ல் வெற்றி கிடைத்துள்ளது. மீதம் உள்ள ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

முனிசிபல் கார்ப்பரேஷன் ஆப் டெல்லி(எம்.சி.டி) எனப்படும் டெல்லி மாநகராட்சியின் தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது அம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவது அதன் காரணம் ஆகும். மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதன் பெரும்பாலான வார்டுகள் பாஜகவிடம் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸும், பகுஜன் சமாஜ் உட்பட இதர கட்சிகள் மீதம் உள்ள வார்டுகளையும் பிடித்துள்ளன.

இதன் 13 வார்டுகள் பல்வேறு காரணங்களால் காலியானதை அடுத்து அதற்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இதில், பாஜக, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியது. இதனால், எம்.சி.டி தேர்தலில் மும்முனைப்போட்டி நிகழ்ந்தது. ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக தனிமெஜாரிட்டியுடன் டெல்லியை ஆளும் நிலையில் எம்.சி.டி இடைத்தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தன.

ஆனால், அக் கட்சியால் வெறும் 5 வார்டுகளில் மட்டும் வெல்ல முடிந்துள்ளது. இத்துடன், எம்.சி.டியின் மூன்று பகுதிகளின் பெரும்பாலான வார்டுகள் பாஜகவிடம் இருந்தன.

இதற்கும், இந்த இடைத்தேர்தலில் மூன்றாவது இடமாக வெறும் மூன்று கிடைத்துள்ளன. இரண்டாவதாக 4 பெற்ற காங்கிரஸ் சற்று உற்சாகமடைந்துள்ளது. இதன் காரணமாக, வரும் 2017-ல் எம்.சி.டியின் அனைத்து வார்டுகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மூன்று கட்சிகள் இடையேயும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013-ல் முதன்முறையாக டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தது. இதில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி தன் பதவியை ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால். பிறகு மீண்டும் 2015-ல் போட்டியிட்ட கட்சிக்கு டெல்லியின் 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி கிடைத்திருந்தது. பாஜகவிற்கு மூன்று மற்றும் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது. இந்த நிலையில் எம்.சி.டி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெறும் 5 வார்டுகளில் கிடைத்த வெற்றி அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x