Last Updated : 02 May, 2016 10:38 AM

 

Published : 02 May 2016 10:38 AM
Last Updated : 02 May 2016 10:38 AM

உத்தராகண்டில் பயங்கர காட்டுத் தீ: 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்; 7 பேர் பலி- 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்க முயற்சி

உத்தராகண்ட் மாநிலம் நைனிடா லில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ மூண்டுள்ளது. காற்று பலமாக வீசியதில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் 2,269 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி கருகி நாசமடைந்துள்ளது. மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ பரவுவதை தடுக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதே போல் வானில் இருந்தும் தண்ணீர் தெளித்து காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி யில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரு எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளன.

இது குறித்து டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, ‘‘நைனிடால், அல்மோரா மாவட்டங் களில் தேசிய பேரிடர் மீட்பு படை யின் 40 குழுக்கள் குவிக்கப்பட்டுள் ளன. காட்டுத் தீ பரவியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மரங்களை கடத்தும் மாபியா கும்பல் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இதற்கிடையில் அடுத்த ஒரிரு தினங்களுக்குள் காட்டுத் தீ கட்டுக் குள் கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள் ளனர்.

எனினும் வெயில் காரணமாக புதிதாக காட்டுத் தீ பரவ வாய்ப்புள்ளதால் உஷாராக இருக் கும்படி மாவட்ட நிர்வாகத்தை வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x