Published : 22 Apr 2016 12:14 PM
Last Updated : 22 Apr 2016 12:14 PM

தவறான தொடுதல்: வீடியோ சர்ச்சையில் ம.பி. அமைச்சர்

மத்தியப் பிரதேச அமைச்சர் பாபுலால் கவுர் பெண் ஒருவரை தவறாக தொட்டதாக காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை, சமூக வலைதளங்களில் உலா வரும் வீடியோவில் உண்மையில்லை எனக் கூறியிருக்கிறார்.

"அந்த வீடியோ பதிவில் உண்மையில்லை. பாஜக பெண் தொண்டர்களை பேருந்தில் ஏறும்படி சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சொல்வது எல்லாம் உண்மை" என எனக் கூறியுள்ளார் 85 வயதான பாபுலால் கவுர்.

அந்த வீடியோ பதிவில் கவுர் பெண் ஒருவரின் பின் பகுதியை தட்டுவது போல் காட்சிகள் உள்ளன. சில தொலைக்காட்சிகளிலும் இந்த வீடியோ வெளியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x