Published : 03 Apr 2022 04:43 PM
Last Updated : 03 Apr 2022 04:43 PM

பக்கவாதத்தில் தவித்த மீனவரை மீட்ட இந்திய கடலோர காவல்படை: அரபிக்கடலில் வீசிய மனிதாபிமான காற்று 

இந்திய கடலோரக் காவல்படையின் மீனவரை மீட்கும் பணிகள் குறித்த படங்கள் | நன்றி: ஏஎன்ஐ

புதுடெல்லி: குஜராத் அருகே அரபிக்கடலில் உதவி கோரிய மீனவருக்கு கடலோர காவல்படையினர் தங்கள் ரோந்து கப்பலில் நடுக்கடலுக்குச் சென்று மீட்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

குஜராத் கடலோரப் பகுதிகளிலிருந்து அங்கு வாழும் மீனவர்கள் அருகிலுள்ள அரபிக் கடலில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். எதிர்பாராதவிதமாக அதில் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியின்படி, குஜராத் கடலில் பவன் ராஜ் ஹான்ஸ் என்ற மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டநிலையில் அவரச மருத்துவ உதவி கோரப்பட்டது. அதன்படி இந்திய கடலோரக் காவல்படையின் சி-161 மற்றும் சி-413 ஆகிய இரு கப்பல்களிலும் சென்ற படையினர் கடற்கரையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் சென்று மருத்துவ அவசரநிலைக்கு உரிய உதவிகளை செய்தனர்.

இதுகுறித்து சில படங்களை வெளியிட்டு இந்திய கடலோரக் காவல்படை அளித்துள்ள தகவலில், ''கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்குழுவின் தலைவர் பக்கவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி மயக்கமடைந்தார். தகவலறிந்த கடலோரக் காவல்படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். தக்கநேரத்தில் உரிய சிகிச்சைகளை அளித்தனர். ஒரு மருத்துவ அதிகாரி முதலுதவி அளித்தார், நோயாளி உடனடியாக அழைத்துவரப்பட்டு டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x