Last Updated : 10 Apr, 2016 11:55 AM

 

Published : 10 Apr 2016 11:55 AM
Last Updated : 10 Apr 2016 11:55 AM

முழு அளவில் மது விலக்கு சாத்தியம் இல்லை?

பசுவதைக்கு தடை விதித்தது போலவே மதுவுக்கு தடை விதிப்பதும், உயர் ஜாதியினரிடம் இருந்து வந்தது என்கிறார் பிரபல சமூகவியலாளர் எம்.என்.ஸ்ரீனிவாசன்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் மாட்டிறைச் சிக்கு தடை, மதுவிலக்கு ஆகிய 2 விஷயங்களை கடந்த 1948-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி ஒரே நாளில் விவாதித் துள்ளனர். இதை நான் குறிப் பிடுவதற்கு காரணம், இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் அனைத்து வகை மதுவுக்கும் தடை அமல் படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள், கேரளா ஆகியவை மதுவிலக்கு வழியில் சென்று கொண்டிருக்கின்றன.

பிஹாரை நிதிஷ் குமார் ஆட்சி செய்கிறார். மதுவிலக்கு யோசனை தன்னுடையது அல்ல, ராம் மனோகர் லோகியாவுடையது என்று நிதிஷ் கூறியுள்ளார். மதுவிலக்கு பற்றி லோகியாவின் நூல்களில் பெரிதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாதாரண மாகவே மதுவிலக்கு பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி மகாத்மா காந்தி பேசியது போல லோகியா அவ்வளவாக பேசவில்லை. ஆனால், 6-வது பாகம் புத்தகத்தின் ஒரு இடத்தில், கல்கத்தா கிளப் புரவலராக இந்திய குடியரசுத் தலைவர் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில், அந்த கிளப்பில் உள்ளவர்களின் முக்கிய வேலையே ஒயின் குடிப்பது தான் என்று அவர் எழுதியுள்ளார்.

எனினும் இந்த உலகத்தின் எந்த பகுதியிலும் மதுவுக்கு தடை விதிப்பது வெற்றி பெறவில்லை என்பது லோகியாவுக்கு தெரியும். மதுவுக்கு தடை விதிப்பது சாதாரணமாக குடிப்பவர்களையும் போலீஸாரையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களாக மாற்றி விடுகிறது.

அமெரிக்காவில் 1920-களில் இதுபோல்தான் தடை கொண்டு வந்தனர். ஆனால், அதன் பிறகு தான் அல் கபோனி போன்ற பெரிய மாபியாக்கள் உருவானார்கள். அந்த மாபியாக் கள் சிகாகோ போன்ற நகரங்களில் உள்ள போலீ ஸாரையும் சரிகட்டி விட்டனர்.

குஜராத்தில் பல ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், சாராயம் சர்வ சாதாரண மாக கிடைக்கிறது. ஏனெனில், எல்லா மட்டங்களிலும் போலீஸார் சமரசமாகி விடுகின்றனர். அதே சமயம் விதிவிலக்கையும் அந்த மாநிலம் வைத்துள்ளது. ஏனெனில் முழு மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை. நடுத்தர குஜராத்திகள் ‘பர்மிட்’ வைத்துள்ளனர். உடல் நலத்துக்காக அவர்கள் மது அருந்த அனுமதிக்கப்படுகின்றனர். இது பெரும்பாலும் மோசடி வேலைதான்.

பாகிஸ்தானின் கராச்சி நகர் சென்றபோது, அங்கு அரசு உரிமம் பெற்ற பல மதுக்கடைகள் இருப்பதை பார்த்து ஆச்சரியப் பட்டேன். இன்றைக்கு பாகிஸ் தானில் இந்திய சுற்றுலா பயணி சட்டப்பூர்வமாக மது அருந்த முடியும். ஆனால், குஜராத்தில் முடியாது.

மதுவுக்கு தடை விதிப்பது தொடர்ந்து தோல்வியில் முடியும் போது, மாநிலங்கள் அதை அமல்படுத்த முயற்சிப்பது ஏன்? மதுவிலக்கினால் நன்னடத்தை கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையா? அப்படி என்றால் அதுவும் விதண்டாவாதம்தான்.

மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான விவாதம் கடந்த 1948-ம் ஆண்டு இரு மடங்கானது. குறிப்பாக பேராசிரியர் ஷிபான் லால் சக்சேனா போன்றவர்கள், பொருளாதார காரணங்களுக்காக (இப்போது அது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது) பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கால்நடைகள் நமது சொத்து. பசு பால் தருகிறது, காளை விவசாயத்துக்கு பயன்படுகிறது என்றனர். ஆனால், இயந்திர மயமாக்கம், டிராக்டர்கள் வருகை போன்றவற்றால் அந்த விவாதம் தற்காலத்துக்கு ஒத்துவரவில்லை. இன்றைக்கு ஒரு சில விவசாயிகள்தான் காளைகளை கொண்டு நிலத்தை உழுகின்றனர்.

டாக்டர் ரகுவீரா இன்னொரு விவாதத்தை முன்வைத்தார். இந்து தர்மாவை குறிப்பிட்டு, ‘‘பிராமணர்களை கொல்வதும் பசுவதையும் சமம்தான்’’ என்று கூறினார். அதன்படி, படித்தவர்கள், அறிவியலாளர்களை கொல்வ தற்கு என்ன தண்ட னையோ அதே தண்டனைதான் பசுவதை செய்பவர்களுக்கும் என்றார்.

இந்துத்துவாவின் அடிப்படை யில் மதுவிலக்கு குறித்து சட்டப்பேரவையிலும் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. பாம்பேவை சேர்ந்த பி.ஜி.கெர் கூறுகையில், ‘‘மது அருந்துதல் பஞ்சமா பாதகங் களில் ஒன்று என்று ஸ்மிருதிகளில் கூறப்பட்டுள்ளது’’ என்றார். அப்படி பார்த்தால், படேல் இனத்தவர்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கூட ஸ்மிருதி தடை விதித்துள்ளது. நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? நல்லவேளை இதுபோன்ற சிந்தனைகள் நிலவிய போதும் நல்ல அரசியல் சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன.

குஜராத்தில் நடந்தது போலவே, பிஹாரிலும் மதுவிலக்கு கடைசி யில் தோல்வி அடையும் என்பது நிஜம். மது விலக்கு சட்டத்தில் மட்டும் இருக்கும். ஆனால், மது குடிப்பவர்கள் வேறு வழிகளை கண்டுபிடித்து விடுவார்கள். போலீஸாரும் குற்றம் புரிபவர் களாகி விடுவார்கள். மாநிலமும் வருவாய் இழக்கும். எல்லா தரப்பிலும் இழப்புதான். ஆனால், தாங்கள் சரியான செயலை செய்ய முயற்சித்ததாக லோகியா ஆதரவாளர்கள் மட்டும் நினைத்து கொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x