Last Updated : 23 Apr, 2016 08:36 AM

 

Published : 23 Apr 2016 08:36 AM
Last Updated : 23 Apr 2016 08:36 AM

மேற்குவங்க தேர்தலில் பாஜக.வின் சுற்றுச்சூழல் ஆர்வலர்: வெற்றிப் பெற்றால் நீர் ஆதாரங்களை வலுப்படுத்தப் போவதாக வாக்குறுதி

மேற்குவங்க தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலரான மோகித் ரே, வெற்றிப் பெற்றால் நீர் ஆதாரங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவ தாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேற்குவங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தல் 6 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதி பாஜக வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரான மோகித் ரே களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு நடத்தி பட்டம் பெற்றவர் என்பதாலும், அங்குள்ள நீர் ஆதாரங்களை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதாலும், அத்தொகுதி மக்களிடையே மோகித் ரே மிகவும் பரிச்சயமானவர்.

இது குறித்து அவர் கூறியதாவது:

நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியபோது, உள்ளூர் மக்கள் எனக்கு தேவை யான உதவிகளை வழங்கினர். இதனால் என்னைப் பற்றி அவர் களுக்கு நன்கு தெரியும்.

மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர் விநியோகப் பகுதிகளில் ஏராளமான தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. கால்வாய்களும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நகரம யமாக்கல் தொடர்பான பிரச்சினை களையும் கவனிக்க வேண்டி யுள்ளது. இதனால் இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் கால்வாய் பராமரிப்பு, நீர் ஆதாரங் களை வலுப்படுத்துவது ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோகித் ரே போட்டியிடும் ஜாதவ்பூர் தொகுதிக்கு வரும் 30-ம் தேதி 5-வது கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x