

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் வாக்காளர்கள் எண் ணிக்கை 4.4 கோடியாகக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், தவறான பதிவு போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்த பின்னர் 73.7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன.
9.5 லட்சம் புதிய வாக்காளர்கள் அப்போது 3.9 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் 2025-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 13.4 சதவீத வாக்காளர்கள் எண்ணிக்கை (மொத்தம் 77 லட்சம் பேர்) குறைந்தது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி குஜராத் மாநிலத்தில் தற்போது வாக்காளர் களின் எண்ணிக்கை 4.4 கோடியாக குறைந்துள்ளது. அதேவேளையில் 9.5 லட்சம் புதிய வாக் காளர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல் முறை வாக்காளர்கள்.
கடந்த 2025 திருத்தப்படாத வாக்காளர் பட்டியலில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. தவிர 18 லட்சம் பேர் இறந்துள்ளனர். 9.8 லட்சம் பேரை அவர்கள் அளித்திருந்த முகவரியில் கண்டுபிடிக்க முடியவில்லை. 3.8 லட்சம் போலி வாக்காளர் அட்டைகள் இருந்தன.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி அகமதாபாத்தில்தான் அதிகபட்சமாக 49.1 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்ததிலும் அகமதாபாத் நகரம்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1.5 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.