Published : 04 Feb 2022 06:39 PM
Last Updated : 04 Feb 2022 06:39 PM

‘‘எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம்’’- அசாதுதீன் ஒவைசி திட்டவட்டம்

புதுடெல்லி: என்னையும் மற்றவர்களை போல முதல்தர குடிமகனாக நடத்துங்கள், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என அசாதுதீன் ஒவைசி கூறினார்.

ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி டோல் பிளாசா அருகே அவரது வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை வேண்டாம் என ஒவைசி மறுத்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய அசாதுதீன் ஒவைசி கூறியதாவது:

என்னையும் மற்றவர்களை போல முதல்தர குடிமகனாக நடத்துங்கள், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம்.

இரண்டு இந்தியா உள்ளது என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால் அது செல்வத்தால் பிரிக்கப்படவில்லை. ஒரு இந்தியா அன்பு, மற்றொன்று வெறுப்பு. இளைஞர்களை தீவிரவாதிகளாக ஆக்குவது யார். ஏன் அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x