Published : 01 Feb 2022 12:52 PM
Last Updated : 01 Feb 2022 12:52 PM

மத்திய பட்ஜெட் 2022: சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்படும்

புதுடெல்லி: பொதுமக்களின் வசதிக்காக அடுத்த ஆண்டு முதல் இ-பாஸ்போர்ட் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் எலக்ட்ரானிக் சிப் அடங்கிய இ-பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்படும் என்றார்.

இந்த வகை இ பாஸ்போர்ட்டுகள் பயோ மெட்ரிக்ஸ், ரேடியோ ஃப்ரீகுவன்சி அடையாளம் ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இயங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். முதன்முதலாக 2019-ல் இந்திய அரசு இ பாஸ்போர்ட் தொடர்பாக அறிவித்தது. சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இ பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்படும் எனக் கூறியது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு அனைத்து மக்களுக்கும் இது கிடைக்கப்பெறவுள்ளதாக இன்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இ-பாஸ்போர்ட்டுகளில் தனிநபரின் அத்தனை விவரங்களும் இருக்கும். டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். ஏற்கெனவே அதிகாரிகள் மட்டத்தில் டிப்ளமேட்டிக் இ பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன்முதல் இ-பாஸ்போர்ட் 2008ல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x