Published : 25 Jan 2022 07:54 AM
Last Updated : 25 Jan 2022 07:54 AM

செம்மர கடத்தல் கும்பலில் 58 பேரை பிடித்த ஆந்திர போலீஸ்

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் எஸ்.பி. விஜயராவ் நேற்று கூறியதாவது: புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை, ராதாகிருஷ்ணன், சித் தூர் மாவட்டம் கே.வி புரத்தை சேர்ந்த தாமு ஆகியோர் செம் மரங்களை கடத்தி சென்னை மற்றும் வெளிநாடுகளுக்கு விற்று வருகின்றனர். இவர்கள் கடந்த 20-ம் தேதி 55 கூலித் தொழிலாளர்களுடன் ராவூரு வனப்பகுதிக்குள் சென்றனர். அங்கு செம்மரங்களை வெட்டி லாரியில் சென்னைக்கு கடத்த முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் போலீஸார், விஜயவாடா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமாக சென்ற லாரிகளை விரட்டி சென்றனர். அப்போது அந்த கும்பல் போலீஸார் மீது கற்கள், கட்டைகளை வீசி தடுக்க முயன்றது. எனினும் லாரிகளை சுற்றி வளைத்து அதில் இருந்த 45 செம்மரங்கள், 24 கோடாலிகள், 3 கத்திகள், ரூ.75,230 கார், லாரியை பறிமுதல் செய்து 58 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு எஸ்.பி. விஜயராவ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x