Published : 24 Apr 2016 11:15 AM
Last Updated : 24 Apr 2016 11:15 AM

மேற்குவங்க மாநிலத்தில் நாளை 4-ம் கட்டத் தேர்தல்: சாரதா மோசடியில் சிக்கிய மதன் மித்ரா வெற்றி பெறுவாரா?

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, மேற்குவங்க மாநில முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகருமான மதன் மித்ரா கைது செய்யப்பட்டார். போதாகுறைக்கு நாரதா ரகசிய ஆபரேஷனில் அவர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சிகளும் சமீபத்தில் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட்டால் வெற்றி கேள்வி குறியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத் துள்ளார். இதன் காரணமாக கடந்த முறை 24,354 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற கமரஹதி தொகுதியில் இருந்தே இந்த முறையும் மதன் மித்ரா போட்டி யிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு எதிராக மனஸ் முகர்ஜி என்பவரை வேட்பாளராக களம் நிறுத்தியுள்ளது.

மேலும் மதன் மித்ரா சிறையில் இருப்பதால், அவருக்கு எதிராக அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வதில் எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த வசதியாக உள்ளது.

அதே சமயம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுடன் மித்ராவின் குடும்பத்தினர் தொகுதியில் களமிறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். எனினும் சாரதா நிதி மோசடி மற்றும் நாரதா ரகசிய ஆபரேஷன்கள் மூலம் மித்ராவுக்கான செல்வாக்கு தொகுதியில் குறைந்திருப்பதை அவரது குடும்பத்தினரே உணர்ந்துள்ளனர்.

தவிர வேட்பாளரை களம் நிறுத்தாத காங்கிரஸின் ஆதரவும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் முகர்ஜி பக்கம் இருப்பதால், கமரஹதி தொகுதியில் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை நடக்கவுள்ள 4-ம் கட்டத் தேர்தலில் வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹவுரா மாவட்டத்தில் உள்ள மொத்தம் 49 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கிறது. மதன் மித்ரா உள்பட மொத்தம் 345 வேட்பாளர்களின் தலை யெழுத்தை தீர்மானிக்கும் தேர்த லாக அமையவுள்ளதால் மாநிலத் தின் ஒட்டுமொத்த கவனமும் இந்த தேர்தல் மீது படிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x