Published : 21 Jan 2022 07:28 AM
Last Updated : 21 Jan 2022 07:28 AM

உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. 41 வேட்பாளர்களை கொண்ட இந்தப் பட்டியலில் 16 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான பூணம் பண்டிட் குறிப்பிடதக்கவர். அவர் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தவர் ஆவார். இந்த தேர்தலில் 40 சதவீதம் பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார். அதன்படி, அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் வெளியான காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 125 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் 50 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x