Published : 25 Jun 2014 11:00 AM
Last Updated : 25 Jun 2014 11:00 AM

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை நிறுத்தக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் இன்று தொடங் கும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த பி. ரவிச் சந்திரன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்கட்ட கலந் தாய்வு முடிந்துள்ளது.

சிதம்பரத்தில் உள்ள அண்ணா மலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களும், 100 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை 2012-ம் ஆண்டு இறுதி யில் தமிழக அரசு கைப்பற்றியது. மேலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 2013-ல் தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

கலந்தாய்வு அறிவிப்பு

இந்த நிலையில், ஜூன் 25 முதல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் என்று நிர்வாக அதிகாரி ஜூன் 20-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே திருவாரூர், திருச்சி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே 100, 25, 50 மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதி வர வேண்டி யுள்ளது. தவிர, முதல்கட்ட கலந் தாய்வில் 149 எம்பிபிஎஸ், 11 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்கள் 2-வது கலந்தாய்வின்போது நிரம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கூடுதல் கட்டணம்

தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தி னால் அரசு மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தவிர, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 5,53,370 என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 12,290 ஆகும். அரசு நிர்வகிக்கும் ராஜா முத்தையா கல்லூரியில் கல்விக் கட்டணம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஜூன் 25-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்போது கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலு மணி ஆகியோர் முன் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைச் செயலர், மருத்துவக் கல்லூரி இயக்குநர், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகப் பதிவாளர், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x