Published : 07 Jan 2022 11:03 AM
Last Updated : 07 Jan 2022 11:03 AM

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு?- மத்திய அரசு, பஞ்சாப் தனித்தனியாக விசாரணைக் குழு அமைப்பு

புதுடெல்லி: பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசு தனித்தனியாக விசாரணைக் குழு அமைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார்.

ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடரபாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதற்கு சுதிர் குமார் சக்சேனா தலைமை வகிக்கிறார். குழுவில் உளவுத் துறை இணை இயக்குநர் பல்பீர் சிங் மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் தலைவர் எஸ்.சுரேஷ் ஆயியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் பஞ்சாப் மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவானது மூன்று நாட்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சாபில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் முழுமையாக கேட்டறிந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x