Last Updated : 31 Mar, 2016 09:45 AM

 

Published : 31 Mar 2016 09:45 AM
Last Updated : 31 Mar 2016 09:45 AM

கேரள காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம்: போட்டியிலிருந்து உம்மன் சாண்டி விலகல்?

கேரள தேர்தலில் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டியிடு வதற்கு, காங்கிரஸ் மாநில தலை வர் வி.எம். சுதீரன் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். இதைத்தொடர்ந்து, போட்டியிலிருந்து விலக முதல்வர் உம்மண் சாண்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

“சில மூத்த தலைவர்களுக்கு நீண்ட காலமாக தொடர்ந்து வாய்ப் பளிக்கப்படுவதால், சிலர் தொடர்ந்து வாய்ப்பின்றி இருக்கி னர் என குற்றம்சாட்டிய சுதீரன், சில மூத்த தலைவர்களுக்கு இம்முறை வாய்ப்பளிக்கக் கூடாது என பிடிவாதம் காட்டுகிறார். இதனால், கேரள காங்கிரஸில் ஸ்திரமற்ற தன்மை காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சுதீரன் விருப்பப்படி, வேட்பாளர்கள் மாற்றப்பட்டால், தனக்கும் அந்த விதிமுறை பொருந்தும். ஆகவே, நானும் போட்டியிலிருந்து விலகி விடுவேன் என மாநில மற்றும் தேசிய தலைமைக்கு உம்மன் சாண்டி திட்டவட்டமாக தெரிவித் துள்ளார் என, அவருக்கு நெருக்க மானவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை மாலையி லிருந்து டெல்லியில், கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேட் பாளர்களை இறுதி செய்யும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண் டுள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என சுதீரன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதன்பிறகே, பிரச்சினை எழுந்துள்ளது.

சுங்க அமைச்சர் கே.பாபு, வருமான வரித்துறை அமைச்சர்கள் அடூர் பிரகாஷ், கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி. ஜோசப், பென்னி பெஹானன், ஏ.டி. ஜார்ஜ் ஆகி யோருக்கு வாய்ப்பு தர சுதீரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவர்களில், பிரகாஷ் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரும் உள் துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா வுக்கு நெருக்கமானவர்கள். மற்றவர்கள் உம்மன் சாண்டிக்கு நெருக்கமானவர்கள்.

“சுதீரனின் இக்கோரிக்கை ஏற் கப்பட்டால், கடந்த 1970 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் என்மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, நானும் போட்டியிலிருந்து விலகு கிறேன்” என உம்மன் சாண்டி உறுதியாக தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற சுதீர னுக்கு 2014-ல் ராகுல் மூலம் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. சுதீரனை ராகுல் மாநில தலைவராக தேர்வு செய்துள்ளார். அதிலிருந்து சாண்டி, சென்னிதாலாவுக்கு எதிராக சுதீரன் காய் நகர்த்தி வருகிறார். சுதீரனை இருவரும் சேர்ந்து எதிர்கொள்கின்றனர்.

தற்போது, கட்சித் தலைமையின் முடிவு என்ன என்பதையே பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x